முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடஒதுக்கீடு பேச்சுவார்த்தைக்கு மறுப்பு: வங்கதேசத்தில் மீண்டும் மாணவர், போலீசார் இடையே பயங்கர மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      உலகம்
Bangladesh 2024 08 04

Source: provided

டாக்கா : வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. 

வங்கதேச உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. 

இதை எதிர்த்து கடந்த மாதம் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர். தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மாணவர் அமைப்புகளுக்கு ஷேக் ஹசீனா கடந்த 2-ம் தேதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

தலைநகர் டாக்காவில் கூடிய 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்ததால் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து