எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை : திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் மற்றொரு கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தி.மு.க.வை சேர்ந்த ஆறாவது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் சில கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை தி.மு.க. கட்சி தலைமை 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக அறிவித்த நிலையில், அவர் வேப்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
அவர் வருவதற்கு முன்பாகவே மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த 6-வது வார்டு தி.மு.க. மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை வாங்கிக் கொண்டார். இதைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது.
அப்போது தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணனும், தி.மு.க.வுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய பவுல்ராஜ் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து இவர்களின் வேட்புமனு பரிசீலினை நடைபெற்றது.
காலை 11:30 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இருவருமே வாபஸ் பெறவில்லை என்பதால், பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மறைமுக தேர்தலில் முதலில் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் முன்னாள் மேயராக இருந்த சரவணன் பிற்பகல் 12.10 மணிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அப்போது அவரை அதிகாரிகள் உள்ளே அனுப்ப முடியாது என தெரிவித்தனர். தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடமே உள்ள நிலையில் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது எனக் கூறி முன்னாள் மேயர் சரவணனை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சுகபுத்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்த, அதன்பின் முன்னாள் மேயர் சரவணன் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து மறைமுக வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு சரவணன் அனுமதிக்கப்பட்டார்.
இதன் மூலம் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அதிக வாக்கு பெற்று ராமகிருஷ்ணன் மேயராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் குறைவான வாக்குகளை வாங்கி தோல்வியுற்றார்.
ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு செல்லாத வாக்கு பதிவாகியது. வெற்றியை அடுத்து ராமகிருஷ்ணனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 2 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 5 days ago |
-
உடல்நலக்குறைவால் மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்
12 Sep 2024புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
-
சீதாராம் யெச்சூரி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
12 Sep 2024புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் நேற்று காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.கஸ்டா
-
தமிழகத்தில் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
12 Sep 2024சென்னை, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம்: ஆதார் ஆணையம் அறிவிப்பு
12 Sep 2024புது டெல்லி, ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
மயிலாடுதுறை அருகே கார், லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
12 Sep 2024சிதம்பரம், மயிலாடுதுறை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வருக்கு விருப்பமில்லை: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
12 Sep 2024ஈரோடு, டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
12 Sep 2024திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக இந்தியருக்கு அமைச்சர் பதவி
12 Sep 2024சிட்னி, ஆஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நல குறைவால் காலமானார்
12 Sep 2024புது டெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
12 Sep 2024மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,619 கன அடியாக குறைந்துள்ளது.
-
திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய கேட்டர்பில்லர் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
12 Sep 2024சென்னை, தமிழகத்தில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.
-
ஆயுள் கைதி சித்ரவதை விவகாரம்: வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
12 Sep 2024வேலூர், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீதான திருட்டு புகாரில் தனிச்சிறையில் அடைத்து துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சி
-
அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கிறது த.வெ.க. மாநாடு
12 Sep 2024சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா
12 Sep 2024கீவ், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக அமெரிக
-
மிலாடி நபி, தொடர் விடுமுறை: 1,515 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு
12 Sep 2024சென்னை, மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,515 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
12 Sep 2024புதுடெல்லி, காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகாவுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான முதல் டி-20: ஆஸ்திரேலியா அபார வெற்றி
12 Sep 2024லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர் காயம்...
-
இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்த பைடன்
12 Sep 2024வாஷிங்டன், இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் டிரம்ப் 24 என எழுதப்பட்டிருந்த தொப்பியை அதிபர் ஜோபைடன் அணிந்திருந்தார்.
-
மதுரை: அதிகாலையில் ஏற்பட்ட துயரம்: விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து - 2 பெண்கள் பலி
12 Sep 2024மதுரை, மதுரையில் பெண்கள் விடுதி ஒன்றில் அதிகாலையில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உள்பட 34 பேர் பலி
12 Sep 2024காசா, காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.
-
பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி தகவல்
12 Sep 2024சென்னை, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழக மாணவர்கள் இரு மொழி கொள
-
இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்: கட்சியினர் மத்தியில் துரைமுருகன் பேச்சு
12 Sep 2024வேலூர், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் முடிந்தது
12 Sep 2024சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.
-
துர்கா பூஜைக்கு கட்டுப்பாடு விதித்த வங்கதேச அரசு
12 Sep 2024டாக்கா, தொழுகை நேரத்தில், துர்கா பூஜை மேற்கொள்ளும் இந்துக்கள் பாட்டு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தும்படி வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
-
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கு: வேலூர் கோர்ட்டில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்
12 Sep 2024வேலூர், 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் தி.மு.க.