முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை விட ஹாரிசின் பிரச்சார குழுவுக்கு 3 மடங்கு அதிக நன்கொடை

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      உலகம்
Kamala-Harris-2024-09-07

வாஷிங்டன், கமலா ஹாரிசின் பிரச்சார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். 

இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் கமலா ஹாரிசின் பிரச்சார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது. 

கமலா ஹாரிசுக்கு 361 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி குவிந்துள்ளது. டிரம்புக்கு 130 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கிடைத்துள்ளது. கமலா ஹாரிசுக்கு கிடைத்த தொகை, இந்த அமெரிக்க தேர்தலில் ஒரு மாதத்தில் ஒரு கட்சிக்கு கிடைத்த அதிகபட்ச தொகையாகும்.

தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபைடன் கடந்த ஜூலை 21-ம் தேதி அறிவித்தார்.

அதன் பின் கமலா ஹாரிஸ் தேர்தல் களத்தில் குதித்தார். அன்றில் இருந்து கமலா ஹாரிசின் பிரச்சார குழு 615 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

இதுகுறித்து கமலா ஹாரிஸின்  பிரச்சார மேலாளர் ஜூலி சாவேஸ் ரோட்ரிக்ஸ் கூறும்போது, குறுகிய காலத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளார். இது தேர்தலில் நெருங்கிய வெற்றி தரும் என்றார். 

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிதி ஆதாயம் ஹாரிசுக்கு சாதகமாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இதில் வருகிற  18-ம் தேதி டிரம்புக்கு தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதி ஜுவான் மெர்ச்சனை டிரம்ப், சந்தித்து தேர்தலுக்குப் பிறகு தண்டனை வழங்கும் வகையில் தேதியைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, அதிபர் தேர்தல் முடியும் வரை, டிரம்ப் மீதான தண்டனை அறிவிப்பதை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து