முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா, சீனாவால் உதவ முடியும் : இத்தாலி பிரதமர் மெலோனி கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      உலகம்
Melony 2024-09-08

Source: provided

ரோம் : உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும்   என்று இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர்  நேற்று 925 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. 

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. அதே வேளை, இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என்று  இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். முன்னதாக இத்தாலிக்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மெலோனி பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது,

சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால், குழப்பமும் நெருக்கடியும் உருவாகும். சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது. இதன் காரணமாகவே,  ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என்று நான் நினைக்கிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து