எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மின்னஞ்சல் வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த மின்னஞ்சலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ‘தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதி ஆகிய இருவரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக கொலையாளிகளை வேலைக்கு அமர்த்தி உள்ளோம். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.10 கோடி கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். இந்த கடிதத்தை தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து அதிரடி விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல சினிமா இயக்குனர் சங்கர், நடன இயக்குனர் கலா, நடிகர் பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் ஆகியோரின் வீடுகளுக்கும் மிரட்டல் விடுத்து கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


