முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்த பைடன்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      உலகம்
Joe-Biden-2024-09-12

வாஷிங்டன், இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் டிரம்ப் 24 என எழுதப்பட்டிருந்த தொப்பியை அதிபர் ஜோபைடன் அணிந்திருந்தார். இது தொடர்பாக  டிரம்பிற்கு பிரச்சாரம் மேற்கொண்ட ஜோ பைடனுக்கு நன்றி என டிரம்பின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரட்டை கோபுரத்துடன், பென்டகன் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 9/11 தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஷாங்க்ஸ்வில்லி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். 

அப்போது  டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை ஜோபைடன் அணிந்திருந்தார். 2001 சம்பவத்தின் போது தீயணைப்பு வீரர்களின் பங்கை குறிப்பிட்டு பேசினார். அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஏராளமானவர்களின் உயிர்களை காப்பாற்றியதை நினைவு கூர்ந்தார். 

மற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ஏராளமான வீரர்கள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தின்போது அனைத்து தரப்பில் இருந்தும் அரசியல் வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக நாட்டு மக்கள் நின்றனர். அதே போல் தற்போதும் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

அரசியல் களத்தில்   டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து வரும் ஜோபடைன், அவரது தொப்பியை அணிந்திருந்தது அங்கிருந்தவர்கள் புருவங்களை உயர்த்த செய்தது. இது தொடர்பாக  டிரம்பிற்கு பிரச்சாரம் மேற்கொண்ட ஜோ பைடனுக்கு நன்றி என டிரம்பின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து