முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துலிப் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 'சி' அணி 525 ரன்கள்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      விளையாட்டு
INDIA-C 2024-09-13

Source: provided

ஆனந்தபூர் : துலிப் கோப்பையில் இந்தியா சி-இந்தியா பி இடையிலான போட்டியில் இந்தியா சி அணி 525 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா பி பவுளிங்...

ஆந்திர மாநிலம், ஆனந்தபூரில் நடைபெற்றுவரும் துலிப் கோப்பைக்கான இந்தியா சி மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சியில் களமிறங்கிய இந்தியா சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ருதுராஜ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு பின்னால் வந்த வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஸ்கோர் எகிறியது.

இஷான் கிஷன் சதம்... 

ருதுராஜ் 58 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 111 ரன்களும், ரஜத் படிதார் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா சி அணியில் உள்ள அனைவரும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் விளாசியதால் அணியின் ஸ்கோர் கணிசமாக ஏறியது. பாபா இந்தரஜித் 78 ரன்னிலும், விக்கெட் கீப்பர் அபிஷேக் போரேல் 12 ரன்னிலும், மனவ் 82 ரன்னிலும், மயங் 17 ரன்னிலும், அனுசுல் 38 ரன்னிலும், விஜய் குமார் 12 ரன்னிலும், சந்தீப் வாரியர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா பி 33 ரன்கள்....

124.1 ஓவர்களில் இந்தியா சி அணி 525 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா பி அணித் தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சாஹர் தலா 4 விக்கெட்டுகளும், நிதீஷ் குமார், நவதீப் சைனி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து