முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2023-11-05

Source: provided

புதுடில்லி : மதுபான ஊழல் வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்கை முடிவு செய்ததில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இந்த வழக்கில் 6 மாதங்கள் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமீன் அளித்தது. ஜாமீன் கொடுத்தாலும் முதல்வர் பதவியை வைத்து அவர் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு சுப்ரீம் கோர்ட் எண்ணற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

முதல்வர் அலுவலகத்தின் உள்ளே செல்ல கூடாது. கோப்புகளில் கையெழுத்து போடக் கூடாது. பொது இடங்களில் மதுபான ஊழல் வழக்கு குறித்து பேச கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியை கெஜ்ரிவால் தனக்கு சாதகமாக உபயோகப்படுத்த முடியாத அளவு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்தார். அதை கடந்த 3 நாட்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சிக்கூட்டத்தில் அறிவித்தார். இதை அடுத்து கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், நேற்று மாலை கவர்னர் வி.கே.சக்சேனாவை கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கெஜ்ரிவால் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். கவர்னரை கெஜ்ரிவால் சந்தித்தபோது டெல்லி அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் அதிஷியின் பெயரை கெஜ்ரிவால் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஏற்றுக்கொண்டனர். சட்டசபை தேர்தல் வரை டில்லி முதல்வராக அதிஷி இருப்பார் என ஆம்ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு புதிய முதல்வர் அதிஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்., அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டெல்லியின் 2 கோடி மக்கள் சார்பாக டில்லியில் ஒரே ஒரு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று கூற விரும்புகிறேன். கெஜ்ரிவால் எனது குரு. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார். என் மீது அவருக்கு நம்பிக்கை அதிகம் உள்ளது.

இந்த முடிவு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் மட்டும்தான் எடுக்க முடியும். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தேன். தற்போது ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆகி உள்ளேன். கெஜ்ரிவால் என்னை நம்பி, அமைச்சர் பொறுப்பு கொடுத்தார். அவர் என் மீது வைத்த நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து