முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் டிசம்பர் மாத கட்டண சேவைகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

திருப்பதி, திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இன்று 19-ம் தேதி முதல்  21-ம் தேதி வரை தங்கள் பெயர்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கட்டண சேவைகளுக்கு முன்பதிவு செய்து பக்தர்கள் டிக்கெட் பெறுகின்றனர். 

இந்த நிலையில், திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பெற விரும்பும் பக்தர்கள் இன்று 19-ம் தேதி முதல்  21-ம் தேதி வரை தங்கள் பெயர்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

விண்ணப்பத்தை பதிவு செய்த பக்தர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன்பின் உரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து