எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: டி-20 தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை முழுவதும் இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது.
சுற்றுப்பயணம்...
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
முதலில் பந்துவீச்சு...
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம்சன் 10 ரன்னிலும், அபிஷேக் சர்மா 15 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னிலும் அவுட் ஆகினர்.
நிதிஷ் ரெட்டி அபாரம்...
தொடர்ந்து இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் நிதிஷ் ரெட்டி 74 ரன்னிலும், ரிங்கு சிங் 53 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பாண்ட்யா 32 ரன்னிலும், பராக் 15 ரன்னிலும், வருண் சக்கரவர்த்தி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஜோடி சேர்ந்தனர்.
222 ரன்கள் இலக்கு...
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 74 ரன்னும், ரிங்கு சிங் 53 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி விளையாடியது.
தொடரை வென்றது...
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பர்வேஸ் ஹுசைன் 16 ரன்களிலும், லிட்டன் தாஸ் 14 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் நஜ்முல் ஹுசைன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறியதால் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது. நிதானமாக ஆடிய மஹ்முதுல்லா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
நாளை 3-வது போட்டி...
இந்நிலையில் டி-20 தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை முழுவதும் இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


