எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கவரப்பேட்டை அருகே ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீசார், ஆர்.பி,எப். போலீசார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதவிர, 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 22 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. எந்த உயிரிழப்பும் இல்லை. ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவக் குழுவினர் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மீட்பு பணியை கண்காணித்து வருகிறார். ரயில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தொடர்ச்சியாக விபத்துக்கள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஒரே நாளில் 463 கைதிகளுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன்
21 Jan 2026பாட்னா, ஒரே நாளில் 300 பேருக்கு ஜாமீன் வழங்கியதே இதற்கு முன்பு சாதனையாக இருந்த நிலையில் தற்போது, பாட்னா ஐகோர்ட் 463 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கியது புதிய சாதனை படைத்துள்ளத
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது இஸ்ரோ
21 Jan 2026சென்னை, இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை (பி.ஏ.எஸ்.) கட்டுவதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான நடவடிக்கைகளில்
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.


