முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Tirupati 2024-02-16

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்மம், சர்வபூபாலம், கற்பக விருட்சம், முத்துபந்தல், மோகினி அலங்காரம், கருடன், அனுமந்தன், யானை, சூரியபிரபை, சந்திரபிரபை வாகனங்களில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

8-ம் நாளான நேற்று முன்தினம் காலை மலையப்பசுவாமி மகாரதத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று காலை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. 

இதையொட்டி அதிகாலை கோயிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர்.  அங்குள்ள மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையடுத்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர். 

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றதால் நேற்று மாலை தங்க கொடி மரத்தில் இருந்து பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டது.  

பிரம்மோற்சவ நிறைவு நாளையொட்டியும், புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையொட்டியும் நேற்று திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 12 அறைகளின் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ. 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து