முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஸ்பேனில் இந்திய தூதரகம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      உலகம்
Jaishankar 2024-11-04

Source: provided

பிரிஸ்பேன் : பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய துணை தூதரகத்தை நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா சென்றடைந்தார். நேற்று பிரிஸ்பேன் நகரில் புதிய இந்திய துணை தூதரகத்தை அவர் திறந்து வைத்தார். இது ஆஸ்ரேலியாவில் உள்ள நான்காவது இந்திய தூதரக அலுவலகம் ஆகும். 

மற்ற அலுவலகங்கள் சிட்னி, மெலபோர்ன், பெர்த் ஆகிய நகரங்களில் உள்ளன. நேற்று தூதரக அலுவலகத்தை திறந்து வைத்த ஜெய்சங்கர், அதன்பின், ரோமா  தெரு பார்க்லேண்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். 

இந்த தூதரகம் குயின்ஸ்லாந்து மாநிலத்துடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது, கல்வி தொடர்பான தொடர்புகளை வளர்ப்பது மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சேவைகளை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தூதரக திறப்பு விழாவில் பங்கேற்ற குயின்ஸ்லாந்து  கவர்னர் ஜீனட், மந்திரிகள் ரோஸ் பேட்ஸ், பியோனா சிம்ப்சன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜெய்சங்கர் தனது சுற்றுப் பயணத்தின் போது, கான்பெர்ரா நகரில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடலில் பங்கேற்கிறார்.  

மேலும், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 2-வது ரைசினா டவுன் அண்டர் தொடக்க அமர்வில் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். இது தவிர ஆஸ்திரேலிய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடகத்தினர் மற்றும் சிந்தனையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து