முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிகளின்படி இயங்காததால் நடவடிக்கை: நாடு முழுவதும் 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
CBSE 2023 07-14

புதுடெல்லி, நாடு முழுவதும் விதிகளின்படி இயங்காத 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைப்பு அந்தஸ்து மற்றும் தேர்வு விதிகளின் கீழ் இயங்குகின்றனவா என அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சில பள்ளிகள் போலி மாணவர் சேர்க்கை, பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான முழுமையான விசாரணைக்கு பிறகு விதிகளின்படி இயங்காத 21 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. மேலும் 6 பள்ளிக்கூடங்களின் தரநிலை குறைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய தகவல்கள் சி.பி.எஸ்.இ. செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 21 பள்ளிகளில் 16 பள்ளிகள் டெல்லியைச் சேர்ந்தவை, 5 பள்ளிகள் ராஜஸ்தானைச் சேர்ந்தவை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து