முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: அணிகலன் தயாரிக்கும் கற்கள் கண்டெடுப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
Vembakkottai 2024-06-30

Source: provided

விருதுநகர் : வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணியின் போது அணிகலன் தயாரிக்க பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இவை அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ஜாஸ்பர், சார்ட் என்ற இக் கற்களை நம் முன்னோர்கள், விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து