முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவை காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாற விடமாட்டோம்: பிரதமர் மோடி

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      இந்தியா
Modi-1 2024-09-14

Source: provided

அகோலா : எங்கு எல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ராஜ வம்சத்தின் ஏ.டி.எம்.களாக மாறி விடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். மேலும் மகராஷ்டிராவை காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாறவிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மகராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அகோலாவில் நடந்த பா.ஜ.க .பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

மகராஷ்டிராவை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக மாற விடமாட்டோம். காங்கிரஸ் கட்சியின் ராஜவம்சத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பஞ்சதீர்த்தங்களுக்கு சென்றிருக்கிறார்களா?.  நாட்டைப் பலவீனப்படுத்தினால் தான் தாங்கள் பலம் அடைய முடியும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும். ஒரு சமூகத்தினரை மற்றவர்களுக்கு எதிராக நிறுத்துவதே அக்கட்சியின் கொள்கை. மகராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி என்பதற்கு ஊழல் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு என்று பொருள்.

பிரதமராக பதவி வகித்த இரண்டு முறை ஆட்சி காலத்தில் நான் ஏழைகளுக்கு நான்கு கோடி வீடுகள் வழங்கியுள்ளேன். இப்போது மகராஷ்டிரா தேர்தலுக்காக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்காக உங்களின் ஆசீர்வாதங்களை வேண்டி இங்கு வந்துள்ளேன்.  கடந்த 2019-ம் ஆண்டு இதேநாளில் நாட்டின் சுப்ரீம் கோர்ட் ராமர் கோயில் தொடர்பான தீர்ப்பினை வழங்கியது. இந்த நவம்பர் 9-ம் தேதியும் நினைவில் கொள்ளப்படும். ஏனென்றால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பின்பு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்ளும் தங்களின் உணர்வு எழுர்ச்சியை காட்டினர். 

கடந்த 2014 முதல் 2024 வரையிலான பத்தாண்டு கால ஆட்சியில் மகராஷ்டிரா மாநிலம் உளப்பூர்வமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்துள்ளது. பா.ஜ.க. மீதான மகராஷ்டிராவின் நம்பிக்கைக்கு ஒரு காரணம் உண்டு. அது மகராஷ்டிரா மக்களின் தேச பக்தி அரசியல் புரிதல் மற்றும் தொலைநோக்குப்பார்வையை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து