முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்மறை சூழலை உருவாக்க நடவடிக்கை: ராஜஸ்தானில் கல்லூரி கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
Student 2023-05-25

Source: provided

ஜெய்ப்பூர் : நேர்மறையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க ராஜஸ்தானில் அரசு கல்லூரிகளின் நுழைவாயிலில் இருக்கும் கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ராஜஸ்தான் மாநில உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மாநில அரசின் காயகல்ப் திட்டத்தின்கீழ், அரசு கல்லூரிகளின் நுழைவாயிலில் இருக்கும் கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக, 10 மண்டலங்களில் உள்ள 20 அரசு கல்லூரிகளின் வாசற்கதவுகளுக்கு அடுத்த 7 நாட்களுக்குள் ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்றும், அதனை புகைப்படமாக எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், கல்லூரியில் சேரும் போதே மாணவர்கள் நேர்மறையாக உணரும் வகையில் கல்லூரிகளின் கல்விச் சூழலும் சூழ்நிலையும் இருக்க வேண்டும். உயர் கல்வி பற்றிய நல்ல செய்தியை சமுதாயத்திற்கு தெரிவிக்க வேண்டும். 

எனவே, கல்லூரிகளில் நேர்மறையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இது கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சி என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் மாணவர் அணியின் மாநில தலைவர் வினோத் ஜாகர் கூறுகையில், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளுக்கு தேவையான கட்டிட வசதிகள் இல்லை, மேசைகள் இல்லை. இந்த நிலையில், மாநில அரசு பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது என்று விமர்சித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து