எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், பயிர் சேதத்திற்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட நேற்றையதினம் தமிழ்நாடு முதல்வர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொது மக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்றும் நேரடியாக சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில், நேற்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.
பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நேற்று (3-12-2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும், எருது , பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது,
அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்


