எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசியாபாத், சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் புதன்கிழமை சென்றனர். காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எம்பிகள் தடுத்தநிறுத்தப்பட்ட பின்பு வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் சம்பலுக்கு செல்வதற்கு முயன்றோம், போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். நான் போலீஸாருடன் தனியாக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் அதனையும் ஏற்கவில்லை.
இன்னும் சில நாட்களுக்குப் பின்பு நாங்கள் வந்தால் அப்போது அவர்கள் எங்களை அங்கு செல்ல அனுமதிப்பதாக கூறுகிறார்கள். இது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கு எதிரானது, அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. நாங்கள் அமைதியாக சம்பலுக்குச் சென்று அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவும், அங்குள்ள மக்களைச் சந்திக்கவும் விரும்புகிறோம்.
அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் புதிய இந்தியா, அரசிலமைப்புச் சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா. அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவு
16 Jan 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தி.மு.க. - நா.த.க வேட்பாளர்கள் இன்ரு மனுதாக்கல் செய்கின்றனர்.
-
ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு
16 Jan 2025அமராவதி, ஆந்திராவில் சேவல் சண்டை போட்டியில் பங்கேற்காத சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு கிடைத்துள்ளது.
-
ரூ.500-க்கு கேஸ், 300 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
16 Jan 2025புதுடெல்லி, டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி தெரிவித
-
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
16 Jan 2025சென்னை, கருணாநிதி அறக்கட்டளை சார்பில், நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை கடந்த 16-ம் தேதி 
-
பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி: நடிகர் சைப் அலிகானுக்கு மர்மநபர் சரமாரி கத்திக்குத்து
16 Jan 2025மும்பை, மும்பையில் பிரபல நடிகர் சைப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார்.
-
7 மாதங்களில் மட்டும் அயோத்தி ராமர் கோவிலில் 183 கோடி ரூபாய் காணிக்கை
16 Jan 2025புதுடெல்லி, அயோத்தி ராமர் கோவிலில் ஏழு மாதங்களில் ரூ.183 கோடி அளவில் காணிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் வெள்ளி, தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கும்.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
16 Jan 2025புதுடெல்லி, விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் முட்கள் மீது படுத்து ஆசி வழங்கும் துறவி
16 Jan 2025பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மகா கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவி ஒருவர், முட்கள் மீது படுத்து மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
-
சந்திரயான் - 4 திட்டத்திற்கு ஸ்பேடெக்ஸ் வெற்றி உதவும்: மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
16 Jan 2025பெங்களூரு, ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
-
பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jan 2025சென்னை, நாமக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை கடந்தது
16 Jan 2025சென்னை, தங்கம் விலை நேற்று (ஜன.16) மீண்டும் ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்தது. இது நகை வாங்கும் சாமானியர்கள் மற்றும் இல்லதரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கர்நாடகாவில் கொள்ளை சம்பவம்: வங்கி ஊழியர் சுட்டுக்கொலை
16 Jan 2025பெங்களூரு, கர்நாடகாவில் வங்கி முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
உத்தர பிரதேசம், வாரணாசியில் பிப். 15-ல் தொடங்குகிறது காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
16 Jan 2025புது டில்லி, மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்ம
-
போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல் படை தாக்குதல்: காசாவில் 65 பேர் உயிரிழப்பு
16 Jan 2025காஸா, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 65 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனையான புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள்
16 Jan 2025பெய்ஜிங், புத்தர் வடிவிலான டொனால்டு டிரம்ப் சிலைகள் ஆன்லைனில் ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
-
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முதல்வர் சந்திரபாபு நிபந்தனை
16 Jan 2025ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று அந்த மாநில முதல்வர் என
-
போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி: ரவுடி பாம் சரவணன் மீது போலீசார் துப்பாக்கி சூடு
16 Jan 2025சென்னை, காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
16 Jan 2025மதுரை, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோவுக்கு அண்ணாமலை வாழ்த்து
16 Jan 2025சென்னை, இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ளூர் ஜாம்பவான்கள்: கிரிக்கெட் வாரியம் புதிய திட்டம்
16 Jan 2025மும்பை, இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க குறிப்பாக உள்ளூர் ஜாம்பவான்களை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோவையில் யானை தாக்கி விவசாயி பலி
16 Jan 2025கோவை, கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
-
நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல்: மேற்குவங்க முதல்வர் மம்தா கவலை
16 Jan 2025கொல்கத்தா, நடிகர் சயிப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதலில் வேதனை அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
-
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்
16 Jan 2025வாஷிங்டன், அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.;
-
தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
16 Jan 2025சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சயீப் அலிகான் வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்
16 Jan 2025மும்பை, சயீப் அலிகானை, கத்தியால் குத்திய குற்றவாளி வீட்டின் அவசரகால பயன்பாட்டுக்கான படிகட்டு வழியாக அவரது வீட்டுக்குள் ஏறி வந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளன