முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      ஆன்மிகம்
Nataraja-Aani-Thirumanjana

Source: provided

சிதம்பரம் : பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த ஜன.4-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதியில் தேர்நிலையை அடைந்தன.

தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர்.   நேற்று  மாலை 3 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு  நடராஜமூர்த்தியும்,  சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.

 இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில்  சிவகாமசுந்தரி சமேத  நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் ஸ்வர்ணாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும் சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள  நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனக் காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். ஜன.14-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜன.15-ம்தேதி புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட ஞானப்பிரகாசர் தெப்பகுளத்தில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் உ. வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் து. ந. சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் ச.க. சிவராஜதீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி. அஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ரமேஷ்பாபு, கே.அம்பேத்கர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து