முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு தொகுப்பு பெற காலக்கெடு நிறைவு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
Ration-shop

Source: provided

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பை பெற நேற்று மாலையுடன் காலக்கெடு நிறைவடைந்தது.

பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி மற்றும் அதே எண்ணிக்கையில் இலவச சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன்களை ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர். இதனைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அன்று ஒருநாள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் வரை, எட்டு நாட்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நடைபெற்றது. இதுவரை சுமார் 75 சதவீதம் ரேஷன் அட்டைதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்களுக்கும் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை வரை பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ள கடைசிநாள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து