முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலிக்க நேரமில்லை விமர்சனம்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      சினிமா
Ravi-Nithya 2025-01-20

Source: provided

குழந்தை பிறப்பு வளர்ப்பில் விருப்பமில்லாத நாயகன் ஜெயம் ரவி, திருமணம் செய்துக்கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

திருமணம் செய்துக் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நாயகி நித்யா மேனன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார். எதிர் எதிர் கருத்துக்களைக் கொண்ட இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து விட, சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் சந்திக்கிறார்கள்.

இந்த சந்திப்பு இவர்களின் மனநிலையை மாற்றுவதோடு, உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு திருமணம் என்ற சம்பிரதாயம் தேவையே இல்லை, என்பதை மக்களுக்கு புரிய வைப்பது தான் ‘காதலிக்க நேரமில்லை படம். நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், பலமான கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டிருக்கிறார். சிங்கிள் மதராக வரும் காட்சிகளில் எப்படிப்பட்ட காட்சிகளாக இருந்தாலும் அதை இயல்பாக கையாண்டு ரசிக்க வைத்து விடுகிறார்.

எமோஷனலான காதல் காட்சிகள், சிறுவன் உடனான நட்புறவு ஆகியவற்றில் தனது நடிப்பு மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. யோகி பாபு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி, பெண்ணியம் பேசாத பெண்களுக்கான ஒரு படத்தை ஆண்களும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், ’காதலிக்க நேரமில்லை’ படம் மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து