எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக 2025 ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்-யை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
ஐ.பி.எல். லில் விளையாடுவதற்காக கார்பின் போஷ் தனது பி.எஸ்.எல். ஒப்பந்தத்தை ரத்து செய்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, கார்பின் போஷ்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐ.பி.எல். நடைபெறும் அதே நேரத்தில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளும் நடைபெறுகிறது.
____________________________________________________________________________________
ஐ.பி.எல்.: ஸ்ரேயா பங்கேற்பு?
உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல். . இந்த தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறையும் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கலை நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியாகவில்லை.
____________________________________________________________________________________
நசரியாவை முந்திய எம்பாப்பே
லா லீகா கால்பந்து தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - வில்லார்ரியல் அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் தரப்பில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 2 கோல்களையும் அடித்தார். வில்லார்ரியல் தரப்பில் ஜுவான் போய்த் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இந்த 2 கோல்களையும் சேர்த்து நடப்பு சீசனில் எம்பாப்பே அடித்த கோல்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அறிமுக சீசனில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த பிரேசில் முன்னாள் கால்பந்து வீரரன ரொனால்டோ நசரியாவை (30 கோல்கள்) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
____________________________________________________________________________________
பும்ரா குறித்து கோலி கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட்டில் ஏராளமான உலக சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணி அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதில் முக்கிய பங்கினை ஆற்றினார். தற்போது ஐ.பி.எல். தொடருக்காக தயாராகி வரும் அவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் உங்களது கெரியரில் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் பும்ரா" என்று கூறினார். இது குறித்து மேலும் பேசிய அவர், "ஜஸ்பிரித் பும்ரா உலகின் அனைத்து வடிவங்களிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஐ.பி.எல்.-ல் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார். நாங்கள் இருவரும் வலை பயிற்சியில் மோதிக்கொண்டால் கூட தீவிரமாக இருக்கும். குறிப்பாக ஐ.பி.எல். போல நாங்கள் வலை பயிற்சியில் மோதிக்கொள்வோம். அவர் வீசும் ஒவ்வொரு பந்தும் மைண்ட் கேம் போல இருக்கும்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்
- திருவாரூர் தியாகராஜர் வீதி உலா.
-
இன்றைய ராசிபலன்
13 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
13 Mar 2026


