Idhayam Matrimony

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான 2-வது கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும்: ரேவந்த் ரெட்டி

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
Revanth-Reddy 2023-12-05

சென்னை, நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்துப் போராடுவோம். டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். எனவே மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படும்" என்று பேசினார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன்பேரில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்தக் கூட்டம் ஐதராபாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து