முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோகுல இந்திராவின் கணவர் காலமானார்: எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Eps 2024-12-03

Source: provided

சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணடைந்தார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான S. கோகுல இந்திரா அவர்களுடைய கணவர் A.R. சந்திரசேகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

பாசமிகு கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரி கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உடல்நலக்குறைவால் மறைந்த கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து