முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதில் அகமது பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிப்பு

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் என்று தெரியவந்துள்ளது. இவன் காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள குர்ரே என்ற சிறிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவன். சிறு வயதிலேயே இவனுக்கு தீவிரவாத இயக்கம் மீது நாட்டம் ஏற்பட்டது. 2018-ம் ஆண்டு மாணவர் விசா மூலம் இவன் பாகிஸ்தானுக்கு சென்றான். அப்போது இவன் மீது சந்தேகப்பட்டு உளவுத்துறையினர் இவனை பின் தொடர்ந்தபடி இருந்தனர்.

பாகிஸ்தானில் மாயமான இவன் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து ஆயுத பயிற்சி பெற்று உள்ளான். 6 ஆண்டுகள் கழித்து 2024-ம் ஆண்டு இவன் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்தான். அப்போது அவனுடன் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளும் வந்தது டிஜிட்டல் புள்ளி விவர ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் பல இடங்களில் கைவரிசை காட்டி வருகிறான்.

இதை உளவுத்துறையினர் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பஹல்காம் தாக்குதல் மூலம் இவன் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு சதி திட்டங்களை இவன் மூலம் நிறைவேற்ற பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து