முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வல்லமை விமர்சனம்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      சினிமா
Vallamai-vimarcanam 2025-04

Source: provided

கிராமத்திலிருந்து சென்னைக்கு மகளுடன் வருகிறார் மிரேம்ஜி. மனைவி இறந்த நிலையில், தனது மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து மகளுடன் தங்கி வேலை செய்கிறார். 

ஒரு நாள் மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக மருத்துவரை சந்திக்கும் போது, சிறுமி அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தன் மகளுக்கு நேர்ந்த அநீதி இனி யாருக்கும் நடக்க கூடாது, என்று எண்ணும் தந்தை பிரேம்ஜி, மகளை சீரழித்த குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? அவருக்கு என்ன நடந்தது என்பதை சொல்லும் படமே இந்த வல்லமை. பிரேம்ஜி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தற்காகவே அவரை பாராட்டலாம். உணர்வுப்பூர்வமாக மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக எடுத்த முடிவு அதிர்ச்சியளித்தாலும், அந்த குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை சொல்லும் போது, பார்வையாளர்களின் இதயத்தை கனக்கச் செய்து விடுகிறாள்.

முத்துராமன், சூப்பர் குட் சுப்பிரமணியம், சி.ஆர்.ரஜித் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஜி.கே.வியின் இசையும், சூரஜ் நல்லுச்சாமியின் ஒளிப்பதிவும் தந்தை மகளின் உணர்வுகளை நமக்கு கடத்திச் செல்கிறது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும் கருப்பையா முருகன், பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய காலக்கட்டத்தின் அவலத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 

மொத்தத்தில், ‘வல்லமைக்கு பாராட்டுக்கள்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து