முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா      அரசியல்
Nayanar-Nagendran 2023-11-1

புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் திடீர் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பகல் 1 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் வரை நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, வருகிற 2026 சட்டசபை தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை எதிர்கொள்வது, குறித்தும், கட்சியில் நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டியை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் தீவீர ஆலோசனை நடத்தினார்கள். 

இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து