முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தகவல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பிரெஞ்சு தூதரகம், அப்பா பைத்தியசாமி கோயிலுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு கடந்த ஏப். 19 ஆம் தேதியும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அன்றைய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சில ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து