முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி முர்மு

வியாழக்கிழமை, 15 மே 2025      இந்தியா
Murmu 2023 04 18

புது தில்லி, தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது சுப்ரீம் கோர்ட் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகள் இதில் இடம்பெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் கவர்னரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளைத் தொடா்ந்தது.

வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இந்தத் தனிப்பட்ட வழக்குடன், சட்டப்பிரிவு 200-ன் கீழ் கவர்னருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசம் குறித்தும், காலக்கெடுவுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் அதற்கான சரியான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ், ஜனாதிபதியின் முடிவுக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட்டிடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது சுப்ரீம் கோர்ட்டால் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளுக்கு ஜனாதிபதி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.

அவர் எழுப்பிய கேள்விகளின் விவரம் வருமாறு:-

1. பிரிவு 200-இன் கீழ் ஒரு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, ​​அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?

2. ஒரு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, ​அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவை வழங்கும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?

3. பிரிவு 200-இன் கீழ் கவர்னரின் அரசியலமைப்பு விருப்புரிமை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?

4. பிரிவு 200-இன் கீழ் ஒரு கவர்னரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?

5. அரசியலமைப்பு ரீதியாக காலக்கெடு இல்லாவிட்டாலும், சட்டப்பிரிவு 200-இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் கவர்னர் பயன்படுத்துவதற்காக, நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?

6. பிரிவு 201-இன் கீழ் ஜனாதிபதியால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது மறுஆய்வுக்கு உட்பட்டதா?

7. பிரிவு 201-இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?

8. கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது, பிரிவு 143-இன் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையைப் பெற சுப்ரீம் கோர்ட்டின் கருத்தைப் பெற வேண்டுமா?

9. பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் கவர்னர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள், அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நீதித்துறையால் ஜனாதிபதியின் முடிவுகள் நியாயப்படுத்தப்படுமா?

10. பிரிவு 142 இன் மூலம் ஜனாதிபதி அல்லது கவர்னர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?

11. பிரிவு 200 இன் கீழ் மாநில சட்டப்பேரவையால் இயற்றப்படும் மசோதா, கவர்னிரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாகுமா?

12. சுப்ரீம் கோர்ட்டின் எந்த அமர்வும் முதலில் ஒரு வழக்கில் கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதைத் தீர்மானித்து, பிரிவு 145(3) இன் கீழ் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?

13. பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுமதிக்கிறதா?

14. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் ஜனாதிபதியின், கவர்னரின் அதிகாரங்கள் பிரிவு 142-இன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?

மேற்கண்ட கேள்விகளை எழுப்புவதன் மூலம், ஜனாதிபதி நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் அரசியலமைப்பு எல்லைகள் குறித்து தெளிவுபடுத்த முயற்சிக்கிறார், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் நீதித்துறை விளக்கத்தின் அவசியத்தை வலுப்படுத்துகிறது. மேலும், ஜனாதிபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டிடம் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மாநில மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு தனக்கு காலக்கெடு விதிக்க முடியாமா என 14 கேள்விகளை முன்வைத்து ஜனாதிபதி கூடுதல் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அமைக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து