Idhayam Matrimony

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
Seaman 2024-02-17

திருச்சி, சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை கல அவகாசம் கேட்டதால் தள்ளிவைக்கப்பட்டது.

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் வருண்குமார். இவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தன்னையும் தனது குடும்பத்தையும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நான்காவது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஐ.ஜி. கோர்ட்டில் ஆஜரானார். சீமான் ஆஜராகவில்லை.

பின்னர் டி.ஐ.ஜி தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், ஏற்கனவே டி.ஐ.ஜி. கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலான விளக்கத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் நேரில் அளித்தார். நேற்று சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மீண்டும் கால அவகாசம் கேட்டார். அப்போது நீதிபதி வருகிற 21-ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும். அன்று சீமான் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறினார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து