முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலோசகராக டிம் சௌதி நியமனம்

வியாழக்கிழமை, 15 மே 2025      விளையாட்டு
Dimchoudry

Source: provided

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடையும் வரை நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதியை, இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (மே 15) நியமித்துள்ளது. 

நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள டிம் சௌதி, கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடுத்த வாரம் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது. அந்த போட்டியிலிருந்து டிம் சௌதி இங்கிலாந்து அணியுடன் இணையவுள்ளார். 36 வயதாகும் டிம் சௌதி நியூசிலாந்து அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 391 விக்கெட்டுகளையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகளையும், 126 டி20 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சி.பி. யில் வெளிநாட்டு வீரர்கள்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.  இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.

பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்.சி.பி. அணியில் இடம் பிடித்திருந்த பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

மொயீன் அலி திடீர் விலகல்

 பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.  இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.  சண்டை நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி வருகிறார்கள்.  இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, சொந்த காரணத்திற்காக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் மெக்கர்க் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கோப்பை வென்ற போலோக்னா 

இத்தாலியில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏசி மிலனை போலோக்னா அணி 1-0 என வீழ்த்தி கோப்பையை வென்றது. டான் அசானே என்டோய்  கடைசி 3 போட்டிகளில் விளையாடமல் இருந்தார். காயத்திலிருந்து மீண்டுவந்த இவர் இந்தப் போட்டியில் 53ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பொலோனியா அணி இத்தாலியன் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 நிமிஷத்தில் இரண்டு அணியின் கோல் கீப்பர்களும் அசத்தலாக பந்தினை தடுத்தார்கள். முதல்பாதியின் கடைசியில் போலோக்னா அணியின் கேப்டனுக்கு மூக்குடைந்து ரத்தம் வழிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் ஏசி மிலன் பந்தினை 54 சதவிகிதம் தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் இலக்கை நோக்கி 2 முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சித்தது. அதையும் போலோக்னா அணி தடுத்துவிட்டது. போலோக்னா அணி 5 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட பந்தில் 1 முறை சரியாக சென்று கோலாக மாறியது. ஏசி மிலனின் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றும் கனவினை போலாக்னா அணி முறியடித்தது.

பட்லருக்கு பதில் மெண்டிஸ் ?

ஐ.பி.எல். போட்டிகள் இந்தியா -பாகிஸ்தான் மோதலால் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள். மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் மே.17ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகள் தேதி மாற்றப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களுக்கு ஏற்கனவே இருக்கும் போட்டிகளை இழக்க வேண்டி இருக்கும்.

இதன் காரணமாக பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். அணிகளுக்கு யாரை வேண்டுமானாலும் மீதமுள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யலாம் எனப் புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது. இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் - பேட்டர் குசால் மெண்டிஸ் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 11 போட்டிகளில் 500 ரன்கள் குவித்திருந்தார். குஜ்ராத் அணியில் டாப் 3 வீரர்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் மூவருமே 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். தற்போது, பட்லர் இல்லாமல் இந்த வெற்றிக் கூட்டணி மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அசையாமல் நின்ற பெயர்ஸ்டோ 

இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது. 35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் யார்க்‌ஷ்ரி அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருக்கும் ஜானி பெயர்ஸ்டோ ஒரு பந்தினை அடித்துவிட்டு அசையாமல் 9.51 நொடிகள் நிற்பார். இரண்டு பந்துகளுக்கு தொடர்ச்சியாக இப்படி நிற்கும் விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை ரோட்ஸே கவுண்டி சாம்பியன்ஷிப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக ஆஸி. உடனான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்துவிட்டு கிரிஸில் காலை வைத்துவிட்டு நடந்து சென்றார். கீப்பர் பந்தினை பிடித்து ஸ்டம்பில் அடித்ததும் நடுவர் அவுட் கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையானது. விதியின்படி அது அவுட்டாக இருந்தாலும் பலரும் இதைக் கடுமையாக விமர்சித்தார்கள். ஜானி பெயர்ஸ்டோ இதனை ஒரு பாடமாக எடுத்துகொண்டு இப்படி செய்து வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக குவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து