எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரூ.49 கோடி பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த தொகை கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகமாம்.
இந்தியாவுக்கு பரிசு....
லண்டனில் நடைபெறவிருக்கும் இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வரும் ஜூன் மாதம் 11-15-ம் தேதிகளில் விளையாடுகிறார்கள். பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் 3ஆம் இடம் பிடித்ததால் இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மடங்கு..
இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 18.49 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சீசனைவிட 162.5 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இறுதிப் போட்டிக்கு 5.76 மில்லியன் டாலர் (ரூ. 49. 28 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த சீசனைவிடவும் இரண்டு மடங்கு அதிகம். ஐ.சி.சி. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஆஸி. அணி வென்றது. அதை தக்க வைக்கும் முனைப்பில் கம்மின்ஸ் அணி தயாராகி வருகிறது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கேப்டன் பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்க அணியும் தயாராகி வருகிறது.
பரிசுத்தொகை விவரம்:
1) வெற்றி பெற்ற அணிக்கு - ரூ. 30.78 கோடி. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 18.46 கோடி. 3) இந்தியா - ரூ. 12.31கோடி., 4) நியூசிலாந்து - ரூ. 10.26கோடி., 5) இங்கிலாந்து - ரூ. 8.2கோடி., 6) இலங்கை - ரூ. 7.18கோடி., 7) வங்கதேசம் - ரூ. 6.15கோடி., 8) வெஸ்ட் இண்டீஸ் - ரூ. 5.13கோடி., 9) பாகிஸ்தான் - ரூ. 4.10கோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


