முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனத்துறை ஊழியர்கள் கவனமுடன் பணியாற்ற அமைச்சர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
Raja-Kannappan

சென்னை, வனத்துறையில் பணியாற்றும்  ஊழியர்கள் பணியின் போதும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஐகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பணிபுரியும் வனவர் கார்த்திகேயன் மற்றும் வனக்காவாளர் திவாகர் இருவரும் புதன்கிழமை (மே14) மாலை  ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கமலாபுரம் கிராமம் அருகே உள்ள முருகர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 77 -ல், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கர்நாடகா அரசு பேருந்து மோதி வன காவலர் மற்றும் வனவர் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட செய்தியை அறிந்து மிகவும் மன வருந்தம் அடைந்தேன். பாதிக்கப்பட்ட வன பணியாளர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வனத்துறையில் பணியாற்றும் வனக்காவலர், வனக்காப்பாளர் உட்பட அனைவரும் பணியின் போதும், சாலையில் பயணிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து