முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை: மதுரை ஐகோர்ட்டு பாராட்டு

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது. 

கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது. 

இது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாவது;

"சித்திரை திருவிழாவில் அழகர் மலையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வழி நெடுகிலும் அனைத்து மக்களும் அவரை தூக்குகிறார்கள். அதிகமான இடங்களில் அன்னதானம், நீர் மோர் வழங்குகிறார்கள். இதில் எங்குமே சாதிய பாகுபாடு இல்லை. இதேபோல் அனைத்து இடங்களிலும் இருக்கலாமே?

மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும். திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறைதான் கடைபிடிக்கப்பட வேண்டும். திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்."

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து