எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை சென்டிரல் - சூலூர்பேட்டை இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நேற்று (வியாழக்கிழமை) மற்றும் 17-ந் தேதி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நேற்று மற்றும் 17-ந்தேதி காலை 10.30, 11.35 மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 3.45 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10, மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1,15, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.30, 3.15, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


