முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவிற்கு பாக். அழைப்பு

வியாழக்கிழமை, 15 மே 2025      இந்தியா
INDIA PAK 2025-05-03

Source: provided

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து ஏப்ரல் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது என்பது உட்பட 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பாகிஸ்தானின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்துக்கும் மேல் பூர்த்தி செய்யக்கூடியது என்பதால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு அந்நாட்டுக்கு மிகப் பெரிய இடியாக அமைந்தது. தொடர்ந்து  இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே  4 நாட்கள் நடந்த மோதலில், பாகிஸ்தான் ராணுவம் கடும் இழப்புகளைச் சந்தித்தது. இதையடுத்து, மே 10ம் தேதி பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ., இந்திய டி.ஜி.எம்.ஓ.வை தொடர்பு கொண்டு ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, மோதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானின் நீர்வள அமைச்சக செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் நீர்வள செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு வாரத்திற்கு முன்பு வந்துள்ளது. அதில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் எனவே, பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய பிரதிநிதிகளை இந்தியா பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அக்கடிதங்களில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததற்கும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதற்கும் பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து