முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதகையில் ருசிகரம்: மலர்க் கண்காட்சியில் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
Staliin

Source: provided

உதகை: உதகை மலர்க் கண்காட்சியில் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க' என்று கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 ஆவது மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். பின்னர் சுமார் 15 ஆயிரம் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து தனது மனைவி துர்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மு.பெ. சாமிநாதன், நீலகிரி எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முதலில் தனது மனைவி துர்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வர், கீழே நின்று கொண்டிருந்த தனது அண்ணன் மு.க. தமிழரசுவின் மகள் பூங்குழலியையும் வரவழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டார்.

முன்னதாக கையை அசைக்கும்படி புகைப்படக் கலைஞர்கள் கேட்டுக் கொண்டனர். எந்த மாதிரி அசைக்க வேண்டும் எனக் கேட்ட அவர், உத்தரவிடுவதைப் போல காட்டட்டுமா? அல்லது (உதயசூரியன் சின்னத்தைக் காட்டி) இப்படிக் காட்டலாமா? என்று கேட்டார். பின்னர் உதயசூரியன் சின்னத்தைக் காட்டியபடி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

இதைத் தொடர்ந்து பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் உருவங்களைப் பார்வையிட்ட முதல்வர், தாவரவியல் பூங்கா வளாகத்தில் ரூ. 24.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரணியகத்தை திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து