முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காசாவில் பலி 84 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 15 மே 2025      உலகம்
Israel

Source: provided

காசா: காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 84 பேர் உயிரிழந்தனர்.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பணய கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை விடுதலை செய்தனர். அதே சமயம், இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், வடக்கு காசாவில் நேற்றுமுன்தினம் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவில் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 48 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்கின்றன. 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். ஹமாஸ் வசம் இருந்த பிணைக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 52,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து