எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மாவின் அப்பா- அம்மா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் அஜித் வடேகர், சரத் பவார் பெயரிலும் புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. 3 பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன. ரோகித் சர்மா தற்போது ஐ.பி.எல். மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 கோப்பைகளை வென்ற்து குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________
ஐ.சி.சி. பட்டம: பவுமா கருத்து
2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.அதேவேளையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும்.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடர்பாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐ.சி.சி. பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம். ஜூன் 11-ம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.என்று பவுமா தெரிவித்துள்ளார்.
___________________________________________________________________________________________________
லா லிகா தொடர்: பார்சிலோனா சாம்பியன்
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. 2024-25 சீசனின் 36-ஆவது போட்டியில் பார்சிலோனா நேற்று எஸ்பான்யோல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது.இதன்மூலம் 36 போட்டிகளில் 27 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகள் மூலம் 85 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து பார்சிலோனா. லா லிகா கோப்பையை வென்றது.
ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 24 வெற்றி, தலா 6 டிரா மற்றும் தோல்வி மூலம் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் பார்சிலோனா தோல்வி அடைந்து, ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள்தான் பெற முடியும். இதனால் பார்சிலோனா 2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றுள்ளது
___________________________________________________________________________________________________
பணக்கார வீரர்: ரொனால்டோ முதலிடம்
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக போர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது போர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.
சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார். இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத் தாண்டியது. களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார். ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
___________________________________________________________________________________________________
இத்தாலி ஓபன் : அரையிறுதியில் அல்காரஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜாக் டிராபரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
21 Jun 2025சென்னை : சென்னை மற்றும் பல பகுதிகளில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஈரானின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
21 Jun 2025தெஹ்ரான், ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேட்டி
21 Jun 2025மதுரை, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
-
புதுப்பொலிவு கண்ட வள்ளுவர் கோட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
21 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்
21 Jun 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது.
-
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
21 Jun 2025ஜெனீவா : இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
21 Jun 2025சென்னை : ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
21 Jun 2025சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா
-
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தல்
21 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
-
உலகத்தை இணைத்த யோகா: விசாகப்பட்டினம் யோகா தினம் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
21 Jun 2025விசாகப்பட்டினம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
சிற்றுந்துகள் திட்டத்தால் 1 கோடி மக்கள் பயணம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 Jun 2025சென்னை, மினி பேருந்து திட்டத்தால் இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள
-
இங்கி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி 471 ரன்கள் குவிப்பு - 3 பேர் சதம்
21 Jun 2025லீட்ஸ் ந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது.
-
யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி
21 Jun 2025மதுரை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கவர்னர் ரவி, 51 தண்டால் எடுத்து பார்வையாளர்களை அசத்தினார். கவர்னருக்கு வயது 73.
-
வால்பாறை அருகே பயங்கரம்: சிறுத்தை தூக்கி சென்ற சிறுமி சடலமாக மீட்பு
21 Jun 2025வால்பாறை : வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், நேற்று சிறுமி சடலமாக மீட்கப
-
ட்ரம்ப் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்: ஈரான் அதிபரின் ஆலோசகர் கருத்து
21 Jun 2025தெஹ்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெர
-
பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக உயர்வு: நிதிஷ்
21 Jun 2025பீகார், பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1
-
சமையலின் ஆஸ்கார் விருது: தமிழருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
21 Jun 2025சென்னை : சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ள நிலையில் அவருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து இந்தியர்கள் 1000 பேரை அழைத்து வர ஏற்பாடு
21 Jun 2025புதுடெல்லி : போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து மேலும் 1000 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
போர் நடைபெறும் ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களையும் வெளியேற்ற இந்திய அரசு முடிவு
21 Jun 2025புதுடெல்லி, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவி
-
டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 Jun 2025மேட்டூர் : கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது.
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: ட்ரம்ப் ஆதங்கம்
21 Jun 2025வாஷிங்டன் : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
-
திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு அலைமோதும் கூட்டம்
21 Jun 2025திருப்பதி : திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனம் நேரம் 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது.