Idhayam Matrimony

திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      தமிழகம்
CBI 2023 04 19

Source: provided

சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் தனியார் ஒப்பந்த காவலாளியாக வேலை பார்த்து வந்தவர், அஜித்குமார் (வயது 29). நிகிதா என்ற பேராசிரியை அளித்த நகை மாயம் புகார் தொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 3 நாட்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை, மடப்புரம், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக மடப்புரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், செக்யூரிட்டி வினோத் குமார் மற்றும் நவீன் குமார் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து