Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      தமிழகம்
Gold 2024-10-28

Source: provided

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைந்தது. அந்த வகையில், கடந்த மாதம் 14-ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கும், ஒரு சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தங்கம் விலை நேற்று முன்தினம் குறைந்திருந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.124-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.124-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து