Idhayam Matrimony

ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலையை" அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: லாகூரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள உப்பு நீர்த்தேக்கப் பகுதியான சக்வால் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். கடந்த 24 மணி நேரத்தில் 423 மிமீ. மழை அவசரநிலையை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சக்வாலில் திடீர் வெள்ளத்தால் சிக்கிய மக்களை வெளியேற்ற ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாகாணம் முழுவதும்  பருவமழை தொடரும் என்பதால் பஞ்சாப் முழுவதும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தான் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 26ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கியதிலிருந்து பஞ்சாபில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து