முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று: யாருக்கு வாய்ப்பு அதிகம்..?

சனிக்கிழமை, 17 மே 2025      விளையாட்டு
Gujarat-Titans-team 2024-05

Source: provided

சென்னை : மீண்டும் ஐ.பி.எல். தொடங்கியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றில்  விளையாடப்போகும் அணி எது என்பது குறித்த அலசல்கள் அதிகரித்துள்ளன.

மீண்டும் ஐ.பி.எல்....

ரசிகர்களை மகிழ்வித்து வந்த 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது.  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இந்தியா - பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது.  

கடும் போட்டி... 

நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி பிளே-ஆப் சுற்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ள அணிகள் எவை என்பதை பார்க்கலாம்.!

1. குஜராத் டைட்டன்ஸ்:

இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே குஜராத் எளிதாக பிளே ஆப் சுற்றை எட்டிவிடும். 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் கூட மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் அந்த அணிக்கு வாய்ப்பு உண்டு.

2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

குஜராத் அணி போலவே 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தாலும் அந்த அணிக்கு வாய்ப்புள்ளது. அதற்கு மற்ற அணிகளின் முடிவு அதற்கு சாதகமாக அமைய வேண்டும்.

3. பஞ்சாப் கிங்ஸ்: 

11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் மழையால் ஒரு போட்டி ரத்தான நிலையில் 15 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் 3-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை எட்டிவிட வாய்ப்புள்ளது. மாறாக 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் வெளியேற நேரிடும்.

4. மும்பை இந்தியன்ஸ்:

12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி கண்டுள்ள மும்பை அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விடும். மாறாக ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த அணியின் ரன் ரேட் (+1.156) வலுவானதாக இருப்பது கூடுதல் அம்சமாகும். இருப்பினும் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த அந்த அணி லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதுதான்.

5. டெல்லி கேப்பிடல்ஸ்:

11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் 13 புள்ளிகளுடன் (ஒரு போட்டி மழையால் ரத்து) 5-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக 2-ல் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் 15 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அப்போதும் மற்ற அணிகளின் முடிவுக்காக கொல்கத்தா காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் கொல்கத்தா அணியின் பிளே-ஆப் வாய்ப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது.

7. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ள லக்னோ அணி 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும். அப்போதும் மற்ற அணிகளின் முடிவு லக்னோவுக்கு சாதகமாக அமைய வேண்டும். அத்துடன் ரன் ரேட்டையும் லக்னோ வலுப்படுத்த வேண்டும். இப்படி எல்லா சூழ்நிலைகளும் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் வெளியேற வேண்டியதுதான். இதனால் எதிர்வரும் போட்டிகள் அனைத்தும் மிக முக்கியமான போட்டிகளாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து