எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாணவர்களின் அடிப்படை திறன்களில் முன்னேற்றம் காணப்பட்டபோதிலும், தேசிய அளவில் நடைபெறும் என்.ஏ.எஸ்., ஏ.சி.ஈ.ஆர், போன்ற திறன் அளவீட்டு ஆய்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கேற்ற மொழித் திறன்கனை அடைவதில் குறைபாடு கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
மாணவர்களின் மொழித் திறன்களை மேம்படுத்தும் ஒரு புதிய முன்னெடுப்பாக "லெவல் அப் " என்ற தன்னார்வ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கமானது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்ளும் வனகயில் ஏற்கனவே ஆசிரியர்களால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற செயல்பாடுகளை கொண்ட "மொழி வள வங்கி" ஒன்றை உருவாக்குவதாகும்.
மாவட்டம் தோறும் (மாவட்டத்திற்கு நான்கு அல்லது ஐந்து ஆசிரியர்கள் வீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் லெவல் அப் வாட்ஸ் அப் குழுவில் இனணக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் ஆங்கில அடிப்பனைத் திறன்கள் மேம்படுத்துவது குறித்தும், சிறப்பாக தங்களது திறன்வளர் நுட்பங்களை கையாளும் ஆசிரியர்களின் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், புலனக்குழுவில் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் வழிமுறைகள் தொடர்பான பதிவுகளை பகிரும் வகையில் அப்புலனாய்க்குழுவானது அமைக்கப்படும்.. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நேரடி கண்காணிப்பில், பள்ளிகளில் லெவல் அப் என்ற தன்னார்வ திட்ட செயலாக்கத்தினால் மாணவர்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித்திறன் அடைவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


