முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிவு

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      இந்தியா
Internet 2023 06 30

Source: provided

புதுடெல்லி : ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இணைய பாதுகாப்பு சார்ந்த அத்துமீறலில் மிகப்பெரிய தரவு கசிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 

இந்த கசிவு மில்லியன் கணக்கான இணைய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் இணையதள பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்வது, அவர்களது அடையாளங்களை களவாடுவது, பிஷ்ஷிங் மோசடி போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்.

இது பல ஆண்டுகாலமாக டார்க் வெப்பில் கிடைக்கும் பழைய தரவுகள் இல்லை என்றும், ‘இன்போஸ்டீலர்கள்’ எனப்படும் மால்வேர் மூலம் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு போன்றவை பயனர்களின் சாதனங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, ஹேக்கர்கள் வசம் சென்றுள்ளது. அதை கொண்டு சம்பந்தப்பட்ட பயனர் கணக்கில் லாக்-இன் செய்வது அல்லது அதை டார்க் வெப்பில் விற்பனை செய்வது போன்றவற்றை செய்துள்ளனர். 

தற்போது கசிந்துள்ள இந்த தரவுகளில் பயனர்களின் லாக்-இன் விவரம் கசிந்துள்ளது. அதாவது மின்னஞ்சல் முதல் சமூக வலைதளம் வரையில் கூகுள், பேஸ்புக், டெலிகிராம், டெவலப்பர்களின் ஜிட்ஹப் கணக்குகள் மற்றும் சில அரசு தளங்களின் விவரங்கள் இதில் கசிந்துள்ளன. அதுவும் சம்பந்தப்பட்ட தளத்துக்கான லிங்க், அதன் பயனர் விவரம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை முறையாக ஹேக்கர்கள் வசம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து