முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை : பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியதாக உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார். அதில், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார்.

இந்த மனு மீதான விசாரணையில், "பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை. திருமணமாகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை. கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது" என தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து