முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      உலகம்
Antonio 1

Source: provided

ஜெனீவா : இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசுகையில்:-

இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்ற வைக்கும். அதை நாம் பரவ விடக் கூடாது. அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள். போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும். போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளின் தலைவிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்தின் தலைவிதியை மாற்ற உதவும். போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மோதல் கணிக்க முடியாததாக உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் ஒற்றுமை மற்றும் ஐ.நா. சாசனத்தை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல், ஈரான் நாட்டின் பிரதிநிதிகள் தங்களுடைய குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் கூறிய நிலையில், குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றால் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்போம் என ஈரான் கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து