முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை

புதன்கிழமை, 9 ஜூலை 2025      விளையாட்டு
ind-eng

Source: provided

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.

கடைசி 3 டெஸ்டுகள்...

'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இதுவரை 148 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்து 145 டெஸ்டுகளில் ஆடி 59-ல் வெற்றியும், 35-ல் தோல்வியும், 51-ல் டிராவும் கண்டுள்ளது. இந்திய அணி இங்கு 19 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும், 4-ல் 'டிரா'வும் சந்தித்துள்ளது. இதில் கடைசி 3 டெஸ்டுகளில் 2-ல் வென்றதும் அடங்கும். 2021-ம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்தியா நிர்ணயித்த 272 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 120 ரன்னில் சுருண்டது நினைவிருக்கலாம்.

அதிகபட்சம் 454 ரன்... 

ஆஸ்திரேலிய அணி 1930-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 729 ரன்கள் குவித்தது இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் மெகா ஸ்கோராகும். இங்கிலாந்தை பொறுத்தவரை 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 653 ரன்கள் சேர்த்தது சிறந்த ஸ்கோராகும். இந்த மைதானத்தில் இந்தியா எடுத்த அதிகபட்சம் 454 ரன்கள் (1990-ம் ஆண்டில்) ஆகும். குறைந்த ஸ்கோரில் அணிகள் 22 முறை 99 ரன்னுக்குள் அடங்கியிருக்கின்றன. இதில் அயர்லாந்து (38 ரன், 2019-ம் ஆண்டு), இந்தியா (42 ரன், 1974-ம் ஆண்டு) முதல் இரு இடங்களில் உள்ளன.

ராகுல் மட்டும் சதம்... 

மொத்தம் 252 சதங்களும், 610 அரைசதங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இங்கிலாந்தின் ஜோ ரூட் 7 சதங்கள் அடித்திருக்கிறார். இந்திய முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் 3 சதங்கள் விளாசி லார்ட்ஸ் நாயகனாக விளங்குகிறார். தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் லோகேஷ் ராகுல் மட்டும் சதம் கண்டுள்ளார். இங்கு ஒரே ஒரு முச்சதம் பதிவாகி இருக்கிறது. 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் கூச் 333 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஒட்டுமொத்தத்தில் அதிக ரன் குவிப்பில் ஜோ ரூட் (22 டெஸ்டில் 2,022 ரன்) முதலிடம் வகிக்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்...

ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் 196 முறை வீழ்த்தப்பட்டுள்ளன. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (123 விக்கெட்), ஸ்டூவர்ட் பிராட் (113 விக்கெட்) டாப்-2 இடத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பிஷன் சிங் பேடி, இஷாந்த் ஷர்மா, கபில்தேவ் தலா 17 விக்கெட்டுகள் (4 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார்கள்.

சாதகமாக இருக்கும்... 

லார்ட்ஸ் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். போக போக பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். சமீபத்தில் இங்கு நடந்த ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 31 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து