முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,996 காலியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி: போட்டித்தேர்வு நாள் அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      தமிழகம்
Teacher 2023-05-16

சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,996 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, உரிய விவரங்களை சரி பார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டும் அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று ஜெயந்தி கூறியுள்ளார்.

டி.ஆர்.பி. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி ஓஎம்ஆர் ஷீட் வடிவில் நடைபெற உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து